» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக டாக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் (48) டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சுமார் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது, டாக்டர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, டாக்டர் பாலச்சந்தரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 11:34:10 AM (IST)

கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: மார்ச் 10 முதல் த.வெ.க வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல்!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:22:58 PM (IST)

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)







