» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)



தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (18.03.2025) துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகமானது தமிழ்நாட்டின் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும். 

இத்துறைமுகமானது தாமிரபரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் 320 விசைப்படகுகளும், 2000 நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்திடவும் மற்றும் மீன்களை கையாளவும் தேவையான கட்டுமான பணிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் 8000 மீனவர்கள் நேரடியாகவும் 12,000 மீனவர்கள் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

இத்துறைமுகத்தின் இரயுமன்துறை பகுதி விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இக்கட்டுமான பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள இரயுமன்துறை மீனவ கிராமத்தை பாதுகாத்திடவும், அக்கிராம மீனவ மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி விட்டு மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிகளை மேற்கொண்டிட கேட்டு அம்மீனவ கிராம பிரதிநிதிகள் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கினை விரைந்து முடித்திடவும், தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான இத்துறைமுக விரிவாக்க பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை சார்ந்த அலுவலர்கள், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட பொறியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory