» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
வியாழன் 13, மார்ச் 2025 10:45:52 AM (IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தாக்கல் செய்த மனுவும், கவர்னரின் ஒப்புதல் பெறாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தள்ளுபடி செய்யக்கோரி விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதே கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கோர்ட்டில் வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இ்தையடுத்து விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 15, நவம்பர் 2025 11:25:40 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சனி 15, நவம்பர் 2025 10:15:50 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)








