» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

சனி 15, பிப்ரவரி 2025 3:33:35 PM (IST)

நெல்லையில் கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதகுளம் மேற்கு புதுக்கோட்டை கட்டிடம் தெருவை சேர்ந்தவர் குருபாதம் மகன் பிரைட் ஜூவர்ட்ஸ் (34). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதே கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் பிரைட், கடந்த 12 ஆண்டுகளாக இந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர், அதே கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச ‘மெசேஜ்’ அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் கோமதி, போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மாணவிக்கு கல்லூரி பேராசிரியர் பிரைட் ஜூவர்ட்ஸ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது. 

இதையடுத்து நேற்று இரவு மருதகுளத்தில் வீட்டில் இருந்த பிரைட் ஜூவர்ட்சை கைது செய்தனர். இதனிடையே கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவனுடன் பழகி வந்ததாகவும், அதனை பேராசிரியர் அறிந்து அவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக அந்த பேராசிரியர் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவியுடன் பழகி வந்த அந்த மாணவனை ‘சஸ்பெண்டு’ செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து

peyar illatha KallooriFeb 16, 2025 - 07:40:04 AM | Posted IP 162.1*****

antha kallooriku peyar illaya? illai kalloori peyarai veliyida asiriyar avargaluku thunivillaya?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory