» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)



மாநில அளவில் திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற குமரி மாவட்ட மாணவிகளுக்கு ஆட்சியர் ஆர்.அழகுமீனா வாழ்த்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பாராட்டி தெரிவிக்கையில்- தமிழ் திறனறித்தேர்வு தமிழ்நாடு அரசால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. அதில் வெற்றிப்பெறும் 1500 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1500 உதவித்தொகை வழங்குகிறது. 

இந்த வருடம் நடைபெற்ற தமிழ் திறனறித்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் கான்வெண்ட் பள்ளி, அல்போன்சா மெட்ரிக் பள்ளி, குமரி மெட்ரிக் பள்ளி, முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, அமலா கான்வெண்ட் பள்ளி, அமலா மெட்ரிக் பள்ளி, முளகுமூடு புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து 23 மாணவர்கள் தேர்வாகினர்.

மாநிலம் முழுவதும் தேர்வான 1500 மாணவர்களையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விருதுநகரில் ஒருங்கிணைத்து கடந்த 31.01.2025, 01.02.2025 ஆகிய இரு தினங்கள் திருக்குறள் மாநாடு நடத்தினார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நிதி சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ஆகியோர் காணொளி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பேச்சு, கவிதை, சிறுகதை போன்ற தனித்திறன் போட்டிகளும் வினாடி வினா, நடனம், நாடகம், பாவனை நாடகம் போன்ற குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

நம் மாவட்டத்திவிருந்து அனைத்துப் போட்டிகளிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, நேர்முக உதவியாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர் ஐயப்பன், பொறுப்பாசிரியராக கவிமணி முதுகலை தமிழாசிரியர் முனைவர் இரா ஈஸ்வரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் சியாமளன் ஆகியோர் தலைமையில் 15 நாட்கள் தக்கலை அமலா கான்வென்டில் வைத்து சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது. 

அதன் பயனாக திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மாணவி திரேஸ் தென்றல் ஜெகத், மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, அஷீபா, அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தக்கலை, சீதா லெட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி ஏழு தேசப்பற்று, மெரிபா லில்லெட், அரசு மேல்நிலைப்பள்ளி முன்சிறை, லினிஷா, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்சிறை,ஜாரு ஸ்டெபி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்சிறை, அஸ்மிதா, அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தக்கலை ஆகியோரர் மாநில அளவில் முதலிடம் பெற்று ரூ.15000 பரிசுத்தொகையைப் பெற்றுள்ளார்கள். 


சிறுகதைப் போட்டியில் குமரி மெட்ரிக்பள்ளி மாணவி மாநில அளவில் இறுதி சுற்றில் கலந்து கொண்டார். இது போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வளர்த்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாரதா, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory