» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அநாகரிக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமீபகாலமாக அப்பகுதியில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே, காவல் துறையினர் இந்த கல்வெட்டு உடைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்து, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory