» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மசாஜ் சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது - 2 இளம்பெண்கள் மீட்பு!
ஞாயிறு 3, நவம்பர் 2024 9:43:59 AM (IST)
கன்னியாகுமரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 இளம்பெண்களை மீட்டனர்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். மசாஜ் சென்டர்கள் இயங்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இங்கு பணியாற்றுபவர்கள் முறைப்படி மசாஜ் செய்வதற்கான பயிற்சி முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் தான் பணியாற்ற வேண்டும்.
ஆனால் ஒரு சில மசாஜ் சென்டர்களில் முறைப்படி பயிற்சி முடித்தவர்களை வைத்து மசாஜ் செய்யாமல் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக பல்வேறு புகார் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 2 இளம்பெண்கள், 2 வாலிபர்களுடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த 23 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 23 வயதுடைய இளம்பெண் கேரளாவை சேர்ந்தவர். 30 வயதுடையவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்.
அங்கிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கேமன்ராஜ் (27), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சம்சீர் நவாஸ் (38) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் இந்த மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியதாக நெய்யாற்றின்கரையை சேர்ந்த வைசாகன் (38) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
வேல்பாண்டிNov 3, 2024 - 06:56:22 PM | Posted IP 162.1*****
பெண்களே பாலியல் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இதில் செயலாற்றுகிறார்கள்.
வேலைக்கு ஆட்கள் தேவை படும் பட்சத்தில் இதில் ஆர்வமுள்ள பெண்களே இதில் ஈடுபடுகிறார்கள்.
SivaSriNov 3, 2024 - 01:07:05 PM | Posted IP 172.7*****
ஏன் இந்த பெண்கள் போகின்றனர்.வசதிபடைத்தவர்கள் செல்ல மாட்டார்கள்.ஆனால் வசதி படைத்த ஆண்கள் சிலர் செல்கின்றனர் இங்கு என்ன தெரிகிறது தேவை அதிகமாகிறது.பணம் தான் இன்று முக்கியம் ஆகவே வீட்டில் ஒரு நபர்க்கு வேலை கொடுத்தால் முக்கியம் பெண்களுக்கு தேவை நிறைவேறுகிறது.ஜாதி அடிப்படையில் வேலை யை தட்டி செல்கின்றன.கல்வியில் குழந்தைகளை சேர்த்து படிக்க கட்டாயமாக்க வேண்டும்.அரசு பள்ளியில் எல்லாம் இலவசமாக கொடுத்தும் படித்து பாதியில் செல்கின்றனர்.அரசாங்கம் பள்ளியில் இலவசமாக படிப்பது என்றால் பாண்டு மாதிரி எழுதி கொடுக்க வேண்டும்.இடையில் சென்றால் அனைத்து பணத்தையும் கூட்டிச் செல்ல வேண்டும்.ஏனென்றால் இது மக்களின் பணம் வீணடிக்கும் படக்கூடாது.அப்ப அவன் தொடர்ந்து கல்வி கற்பிப்பான்.மெல்ல கற்றல் என்பதற்கு தனி பள்ளி வேண்டும்.அதையும் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களும் சேர்த்தால் பள்ளியின் ஆசிரியப் பணி முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும்.மாற்றம் இருந்தால் வாழ்க்கை மேலும் செல்லலாம்.பெண்கள் இத்தொழிலில் வருமானம் கிடைக்கும்.இதற்கு வர அவசியம் இல்லை.
JOHNNov 4, 2024 - 07:26:26 AM | Posted IP 162.1*****