» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குளச்சல் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 2, நவம்பர் 2024 4:51:14 PM (IST)
குளச்சல் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள வாணியகுடி பகுதியை சேர்ந்தவர் சாஜன் (21). இவர் பைக் மெக்கானிக்காக குளச்சலில் பணியாற்றி வருகிறார். நேற்று கருங்கல் அருகே நீர்வக்குழி என்ற பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.