» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடிப்பு!!
வெள்ளி 1, நவம்பர் 2024 5:16:02 PM (IST)
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.