» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம்பெண்: காதல் ஜோடி கைது!
வெள்ளி 1, நவம்பர் 2024 11:17:37 AM (IST)
வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின்போது சென்னை அருகே தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் தெரிவித்த நிலையில், அவரது தாயோ தன் மகனை பெண் போலீசுக்குதான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது.
இதனால் தனது காதலி அபி பிரபாவிடம் எஸ்.ஐ. வேடமணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார். இதன்படி அபி பிரபா எஸ்.ஐ. வேடம் அணிந்து சிவாவின் தாயாரை சந்தித்திருக்கிறார். மேலும் அபி பிரபா தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக சிவா தனது தாயாரிடம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் இந்த விஷயம் ஊர் முழுக்க பரவிய நிலையில், வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்தனர். இதையடுத்து எஸ்.ஐ. போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும், அவரது காதலரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
உண்மைNov 1, 2024 - 03:45:52 PM | Posted IP 162.1*****
சில நாகர்கோவில் கண்ணயகுமாரிகாரர்கள் எல்லாம் பிராடு பித்தலாட்டக்காரர்கள்
REALNov 2, 2024 - 09:34:36 AM | Posted IP 162.1*****