» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு: டி.டி.வி.தினகரன் இரங்கல்

வியாழன் 31, அக்டோபர் 2024 4:16:39 PM (IST)

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (வயது 36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

காவல் உதவி ஆய்வாளர் சரவணனை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory