» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

புதன் 30, அக்டோபர் 2024 10:24:35 AM (IST)



மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு இன்று (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிலைக்கு கீழ் உள்ள தேவரின் த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதன் பின் குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பிறகு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வரை தொடர்ந்து கோரிபாளையம் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, சீமான், ஜி.கே.மணி, ஒ.பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் அணிவித்து மரியாதை செய்கின்றனர். தேவர் குருபூஜை விழாவை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory