» செய்திகள் » தமிழகம்

Share

நடிகை ரஞ்சிதா தற்கொலை முயற்சி?

சனி 6, மார்ச் 2010 3:55:22 PM (IST)

சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது போலியான படம் என்று சாமியாரின் மடத்தினர் மறுத்துள்ளனர். ஆபாச படக்காட்சிகளால் ரஞ்சிதா அதிர்ச்சியாகி உள்ளார்.

தியாகராய நகரில் உள்ள அவரது வீடு பூட்டி கிடக்கிறது. படம் சம்பந்தமாக கருத்து கேட்க முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். டி.வி.யில் படங்கள் ஒளிபரப்பானதுமே தலைமறைவாகி விட்டார். எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆந்திராவில் நெருக்கமான தோழி வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கும் "ராவணன்” படத்தில் கடைசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரது சீன்கள் முடிந்து விட்டன. எனவே "ராவணன்” படக்குழுவினருக்கும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. "டப்பிங்” பேச தேடிக் கொண்டிருக்கின்றனர்.

போலீசாரும் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க வைக்க எதிர்கோஷ்டியும் அவரை தேடி அலைகிறது. நெருக்கமான நண்பர்கள், நடிகர், நடிகைகள் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனர்.

அவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். ராகேஷ்மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரும் மனம் உடைந்து இருக்கிறாராம். இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை என்கின்றனர். கணவருடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்துவதாகத்தான் ரஞ்சிதா கூறி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியாகத்தான் வசித்தார்.

டெலிவிஷனில் வெளியான ஆபாச காட்சிகளால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சிதா ஆந்திராவை சேர்ந்தவர். அங்கு தான் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்கின்றனர்.

படப்பிடிப்புகளில் தெலுங்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இதுபற்றி தான் பேசுகிறார்களாம். தற்கொலை முயற்சியில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் கூறுகிறார்கள். இந்த செய்தி ஆந்திர இணைய தளங்களிலும் வெளியாகி உள்ளது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads