» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சனி 5, அக்டோபர் 2024 5:53:21 PM (IST)
ரேஷன் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க நவம்பா் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு சரமாரி அடி-உதை நெல்லையில் பரபரப்பு
சனி 15, மார்ச் 2025 8:20:41 PM (IST)

திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? சீமான் கேள்வி!
சனி 15, மார்ச் 2025 5:49:34 PM (IST)

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 15, மார்ச் 2025 5:32:44 PM (IST)

ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சனி 15, மார்ச் 2025 5:18:39 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் நெல்லை மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் திடீர் மரணம்!
சனி 15, மார்ச் 2025 3:43:19 PM (IST)

தி.மு.க.வின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுமாக இருக்கிறது: அண்ணாமலை விமர்சனம்
சனி 15, மார்ச் 2025 3:30:26 PM (IST)
