» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

செவ்வாய் 1, அக்டோபர் 2024 11:56:54 AM (IST)

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 6,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சாா்பில் அக்டோபா் முதல் நவம்பா் வரை முக்கிய மாவட்டங்கள், வெளிமாநிலங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்படவுள்ளன. 

இதில் ஏற்கெனவே 268 சேவைகள் அடங்கிய 28 சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடமாநில பயணிகளுக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory