» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் 20ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, செப்டம்பர் 2024 12:32:46 PM (IST)
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 20ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 20.09.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 20.09.2024 அன்று காலை 10.00 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சியால் பலமடங்கு கேடு: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!
சனி 26, ஏப்ரல் 2025 10:59:27 AM (IST)

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் பலி; முதல்வர் இரங்கல்: நிவாரண நிதியுதவி அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 10:54:25 AM (IST)
