» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை
புதன் 18, செப்டம்பர் 2024 10:03:58 AM (IST)
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார் இவரை பிடிக்க முயன்ற போது அவர் போலீசாரை தாக்கியதால் போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநக போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும். இதற்குமுன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.