» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டாலும் உண்மை மாறாது: சீமான் கருத்து!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:24:41 PM (IST)

"ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டாலும் அவர் கேட்ட அந்த கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது" என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

கோவையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வின் தாக்கம் டில்லி வரையும் எதிர்க்கட்சிகள் அறிக்கை விடும் அளவுக்கும் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரபல ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு கண்டன அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள அண்ணாமலை மன்னிப்பு கோரி விட்டாலும் இன்னமும் விவகாரம் ஓயவில்லை. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., என அனைத்துக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், "மதுவுக்கு எதிராக நீண்ட காலம் போராடி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டும். தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை தந்துள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகிறார். இதை நம்புகிறீர்களா?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பேசின உண்மை மாறாது. அவரின் கேள்வி நாடு முழுவதும் பரவி விட்டது. ஆனால் அதிகாரம் அதை பணிய வைக்கிறது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவித்தாலும் அந்த கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.


மக்கள் கருத்து

இவனே திருடன்Sep 16, 2024 - 12:14:20 PM | Posted IP 162.1*****

வீடு வாடகை கட்ட முடியாமல் 1 கோடி மதிப்புள்ள கார் வாங்கினது பெரிய திருடன்

உரிமையாளர்Sep 14, 2024 - 02:37:58 PM | Posted IP 162.1*****

GST பற்றி இந்த கோமாளிக்கு என்ன தெரியும்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory