» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் அதிபர் பேசிய வீடியோ வெளியீடு: அண்ணாமலை வருத்தம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 4:26:17 PM (IST)
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பன் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டதற்கு திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் மட்டுமின்றி ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், வணிக உரிமையாளருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தனிப்பட்ட சந்திப்பை பாஜகவினர் வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன்.
அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)

தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் பா.ஜ.க. அரசு பார்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
வியாழன் 19, ஜூன் 2025 11:36:50 AM (IST)

சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வியாழன் 19, ஜூன் 2025 11:12:55 AM (IST)

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)

பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 8:37:31 AM (IST)
