» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பார்முலா-4 கார் பந்தயம்; வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது: உதயநிதி ஸ்டாலின்
வெள்ளி 13, செப்டம்பர் 2024 4:08:11 PM (IST)
விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான். மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. கார் பந்தயத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதனை படம்பிடித்து பெரிய செய்தியாக்கி விடலாம் என்றும் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கூட சிலர் திட்டமிட்டனர்.
ஆனால் கார் பந்தயம் ஒருபுறம் நடந்தபோது, மறுபுறம் போக்குவரத்து சீராக இயங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்த பிறகு, விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். சிறிய விபத்து நடந்தால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டும் என்று சிலர் காத்திருந்தனர். பந்தய தடத்திற்குள் நாய்க்குட்டிகள் ஓடி வந்ததைப் பார்த்து இது நாய் பந்தயமா? கார் பந்தயமா? என்று சிலர் விமர்சித்தனர்.
சென்னையில் நடந்தது பார்முலா-4 கார் பந்தயம். பார்முலா-1 கார் பந்தயத்தில் கூட சில நேரங்களில் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் உள்ளே வந்துவிடும். இதுபற்றி கூட தெரியாதவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)
