» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் வசந்த் எம்.பி., நன்றி
புதன் 11, செப்டம்பர் 2024 5:11:19 PM (IST)
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் அலுவலக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பொருளாளராகவும், செயலாளர்களாக எம்.பி.,க்கள் ரஞ்சீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (மக்களவை) ஆகியோரை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.