» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 4:47:52 PM (IST)
தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த 5 இளைகர்கள், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் 5 பேரும் குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 5 பேரும் ஆற்று நீரில் மூழ்கி மாயமாகினர். த
கவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், கலைவேந்தன், கிஷோர், மனோகரன், பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.