» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: போலீசார் விசாரணை!!!

வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 4:18:04 PM (IST)

புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் சேர்ந்தவர் மரிய டேவிட் (56) அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கும் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று இவரை ஆட்டோ வாடகைக்கு வருமாறு போனில் அழைத்து வாலிபர்கள் கூட்டி சென்றனர். 

இந்த ஆட்டோ அரசமூடு பகுதி நெடுமானிகுளம் வரும்போது அங்கே இவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்ந்து வாலிபர்கள் மரிய டேவிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த இவர் ரத்த காயத்துடன் ஆட்டோவில் ஏறி, தப்புவதற்காக சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து போன் மூலம் தன்னை வெட்டியதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இது தொடர்பான தகவலின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று டேவிட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார். இதையடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்மந்தமாக புதுக்கடை போலீசார் முதற்கட்டமாக 3பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory