» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு : தமிழிசை விமர்சனம்!
புதன் 24, ஜூலை 2024 10:41:48 AM (IST)
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு என்று சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கலின் போதே தமிழ்நாடு எம்பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாளை தி.மு.க. மற்றும் அதன் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதேபோல் வரும் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் புறக்கணிக்கிறேன் என்று அறிவித்தார். இதனால் மற்ற மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார். மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும்,தமிழக மக்களின் நலனும் இருக்கிறது மேலும் தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும்.
இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழக நலனை முதல்-அமைச்சர் புறக்கணிக்கிறார். இவர்களின் அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)
