» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சசிகலா சுற்றுப்பயணத்தில் ரூ.89 ஆயிரம் பணம் திருடிய 6 பேர் கைது
புதன் 24, ஜூலை 2024 8:19:12 AM (IST)
தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணத்தில் ரூ.89 ஆயிரம் பணம் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 17-ந் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தென்காசியில் இருந்து இந்த பயணத்தை தொடங்கினார். தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் திறந்த வேனில் திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அவர் சென்ற பின்னர் கூட்டத்தின் இருந்த சிலரது பணம் திருட்டு ேபானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் தென்காசி போலீசில் புகார் செய்தனர். மொத்தம் ரூ.89 ஆயிரம் திருட்டுப் போய் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற சேன்டோ (43), திருச்சி மாவட்டம் முசிறி பேட்டை ரோடு செங்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (36), சிவகாசி முத்துமாரியம்மன் கோவில் காலனி 7-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (40), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வெளிப்பட்டினம் பசும்பொன் நகரை சேர்ந்த செல்வக்குமார் என்ற சேனா (44), பழனி பெரியப்பா நகரை சேர்ந்த முனீஸ்வரன் (43), ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த குத்தாலிங்கம் (58) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். கைதான இவர்கள் 6 பேரும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் திருடுவதற்காக வந்திருந்ததும், அவர்கள் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

JAY FANSJul 24, 2024 - 03:58:13 PM | Posted IP 162.1*****