» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்கிரவாண்டியில் தி.மு.க வெற்றி முகம் : இனிப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

சனி 13, ஜூலை 2024 12:50:14 PM (IST)



விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் துவக்கம் முதலே தி.மு.க முன்னிலையில் உள்ளது. இதில் 8வது சுற்று நிலவரப்படி தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 51,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க-வினர் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை அடுத்து அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 16, 2024 - 08:23:03 AM | Posted IP 162.1*****

எந்த பயனும் இல்லை, பிரியாணி, குவாட்டர், 2000 ரூவாய்க்காக பிச்சை எடுத்து போட்ட ஒட்டு தான்.

truthJul 14, 2024 - 05:38:34 AM | Posted IP 172.7*****

Money-Money-Money. The election was just a joke. The two main parties have stopped attracting new and young supporters. So their vote bank is shrinking. So the new technique to get more votes to win the election is through money, money. Shame to the so called democracy.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory