» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன்வளத்துறை சார்பில் 23 புதிய அறிவிப்புகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
ஞாயிறு 23, ஜூன் 2024 9:05:43 AM (IST)
சட்டசபையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், துறையின் மானியக் கோரிக்கையின்போது 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் சாவடியில் ஒருங்கிணைந்த மீன் இறங்கு தளம் ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* கடலூர் சாமியார் பேட்டை மற்றும் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.30 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி மீனவ கிராமத்தில் ரூ.25 கோடி செலவில் தூண்டில் வளைவு மற்றும் வலைபின்னும் கூடம் அமைக்கப்படும்.
* தஞ்சையில் உள்ள 11 மீனவ கிராமங்களில் ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் வடிகால் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெறும்.
* கடலோர கிராமங்களில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கடற்பாசி வளர்ப்பினை மேற்கொள்ள ரூ.39.88 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தூத்துக்குடி விவேகானந்தர் நகர், பெரியதாழை மீன் இறங்கு தளத்தில் ரூ.38 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தஞ்சை மாவட்டம் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் கிராமங்களில் ரூ.32 கோடி செலவில் தடுப்பு சுவர் கட்டப்படும்.
* மயிலாடுத்துறை கீழமூவர்கரை கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரங்கம்பாடி மீன்பிடிதுறைமுகத்தில் கூடுதல் வசதிகள் என மொத்தம் ரூ.15 கோடி செலவில் பணிகள் செய்யப்படும்.
* தூத்துக்குடி பழைய காயலில் படகு அணையும் புன்னக்காயலில் உட்கட்டமைப்பு வசதிகளும் ரூ.37 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* மீன்களை வேறு இடங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்ய 71 குளிரூட்டப்பட்ட வாகனங்கள் ரூ.14 கோடியே 20 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு ரூ.2 கோடி செலவில் 200 செயற்கைகோள் தொலைப்பேசிகள் வாங்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் பெரியநாயகி தெரு, பள்ளம்துறை மீன் இறங்கு தளங்களில் ரூ.52 கோடி செலவில் பணிகள் செய்யப்படும்.
* மயிலாடுதுறை சந்திரபாடி மீன் இறங்குதளத்தில் ரூ.32 கோடி செலவில் தடுப்பு சுவர் அமைக்கப்படும்.
* செங்கல்பட்டு கானத்தூர் ரெட்டி குப்பத்தில் ரூ.19 கோடி செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்.
* தூத்துக்குடி தருவைக்குளம் மீன் இறங்குதளத்தினை மீன்பிடி துறைமுகமாக மாற்ற ரூ.1 கோடி செலவில் ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.
* உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* கிராமங்களில் மீன் உற்பத்தியினை அதிகரிக்க ரூ.75 லட்சம் செலவில் மீன் குஞ்சுகள் இருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* கைத்தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூரை மீன்களுக்கு கூடுதல் விலை கிடைக்க ரூ.2 கோடியில் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* மீனவ மகளிர், உலர் மீன் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் ரூ.2 கோடி செலவில் பசுமை மீன் உலர் நிலையங்கள் நிறுவப்படும்.
* பசுமை கடல் வளத்திட்டம் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் செயல்படுத்தபப்டும்.
* நாகப்பட்டினம் செருதலைக்காடு கிராமத்தில் ரூ.5 கோடி செலவில் மீன் இறங்கு தளம் மேம்படுத்தப்படும்.
* புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மீன்வளத்துறை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த துறை மறுசீரமைப்பு செய்யப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)
