» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்வதேச யோகா தினம் தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை!

சனி 22, ஜூன் 2024 5:35:22 PM (IST)சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரத்தில் 100 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமை தாங்கி யோகாசனங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். 

பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரவிந்த் யோகாசன இயக்குநர் மருது சுபாஷ் யோகாசன பயிற்சி அளித்து யோகாவின் பயன்கள் பற்றி விளக்கினார். மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரத்தில் 100 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory