» செய்திகள் » தமிழகம்

Share

நித்தியானந்தா வீடியோ: பணம் பறிக்கும் கும்பலின் சதி திட்டமா? பரபரப்பு தகவல்கள்!

வியாழன் 4, மார்ச் 2010 5:59:07 PM (IST)

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது. இந்த காட்சிகள் பொய்யானவை என்ற சுவாமி நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மார்பிங் முறையில் உருவத்தை மாற்றி இருப்பதாக அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா என்ற லெனின் கருப்பன் மூலம் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஆந்திரா கவர்னராக இருந்த என்.டி. திவாரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி வெளியானது. இவை எல்லாமே பணத்துக்காக திட்டமிட்டு படம் பிடிக்கப்பட்டதாகும்.

அதே பாணியில் நித்யானந்தாவையும் படம் பிடித்து அவரது ஆன்மீக புகழை அழிக்க ஒரு கும்பல் திட்டமிட்டதும் அந்த கும்பல் நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிய வந்துள்ளது. ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சி.டி.க்காக தயாரித்தார் என்றும் அந்த பெண்தான் சென்னையில் உள்ள எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், சாமியாரது சி.டி.க்களை பதிவு தபாலில் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். அந்த மர்ம பெண் யார் என்பது தெரியவில்லை.

சாமியார் விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகை ரஞ்சிதா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவரும், சாமியாரும் இருப்பது போன்ற காட்சிகளை பார்க்கும் போது, ரஞ்சிதா சினிமா காட்சி போல் சர்வ சாதாரணமாக போஸ் கொடுக்கிறார்.

எனவே ரஞ்சிதா பணத்துக்காக இந்த காட்சியில் நடித்து இருக்கலாம் என்றும் இதற்காக லட்சக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாமியார் ஆசிரமத்தில் பழைய நடிகை ராகசுதா யோகா கற்று அங்கேயே தங்கி இருந்து பக்தி பிரசங்கம் செய்து வந்தார்.

சாமியாருடன் ஏற்பட்ட மோதலில் ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டெலிவிஷனுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சி.டி.யை அனுப்பிய அந்த பெண் சிக்கினால்தான் இந்த சதி திட்டங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது தெரிய வரும்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads