» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி... தமிழிசையை சந்தித்த அண்ணாமலை!!

வெள்ளி 14, ஜூன் 2024 4:09:45 PM (IST)முன்னாள் ஆளுநரும், பாஜ., மூத்த தலைவருமான தமிழிசையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து தமிழிசை கூறியதாவது: சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா அறிவுரை தான் கூறினார். தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பணிகள், தேர்தலில் மேற்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழிசையை அவரது வீட்டில் அண்ணாமலை சந்தித்து பேசினார்.இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜ.வின் தலைவராக திறம்பட செயல்பட்டவருமான அக்கா தமிழிசையை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசையின் அரசியல் அனுபவம், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory