» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜகவுடனான கூட்டணி முறிவு ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு : இபிஎஸ்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 9:50:33 AM (IST)
பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அஇஅதிமுக தொண்டர்களின் முடிவு என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது அஇஅதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு, இனி அஇஅதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பெற்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.
இங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள், ஒரிசாவில் நவீன் பட்நாயக்கோ அல்லது போன தேர்தலில் மம்தா பானர்ஜியோ, யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியா வாக்கு கேட்டார்கள்? தமிழகத்தின் உரிமைக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும் மட்டுமே நாம் பாராளுமன்ற உறுப்பினர்களை இனி தேர்ந்தெடுக்க போகிறோம். இங்கே தொலைக்காட்சி விவாதங்களில் இனி யாரும் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? என்று பேசத் தேவையில்லை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.