» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது: கே.எஸ்.அழகிரி

திங்கள் 2, அக்டோபர் 2023 5:42:37 PM (IST)

தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டியில், "காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கர்நாடக மக்கள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அங்குள்ள மற்ற அரசியல் கட்சிகளும் பிரச்சினையை உருவாக்கவில்லை. 

காவிரியில் தண்ணீர் திறக்க அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தபோது, தமிழக காங்கிரஸ் சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தமிழக அரசின் பக்கம் நாங்கள் நிற்கிறோம். தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கர்நாடக அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை சட்டப்படி கொடுக்கும். கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசும் கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

MAKKALOct 3, 2023 - 04:23:26 PM | Posted IP 172.7*****

செபாஸ்டியன் சைமன் மாதிரி செம காமெடியன் ஆக இருக்கிறார்.....

Konjamavathu Manasatchiyodu pesavumOct 2, 2023 - 08:21:00 PM | Posted IP 162.1*****

thiru alagiri avargale....Karnataka congress arasai thamilagathirku thanner thara valiuruthavum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory