» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக காவலர் சஸ்பெண்ட்!!

செவ்வாய் 30, மே 2023 4:35:20 PM (IST)

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நாகராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ள சாராயம்  அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பிலும் தமிழக காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில்,  கஞ்சா விற்பனை செய்வோர், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நவராஜை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.


மக்கள் கருத்து

என்னமே 30, 2023 - 06:37:41 PM | Posted IP 172.7*****

சாரே... போலீசே இப்படி இருந்தால் எப்படி... உங்கள் பதவி என்பது ஒழுக்கம் வாய்ந்த பதவி...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory