» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. ஆட்சியில் ஆவின் அழிவுப்பாதைக்கு செல்கிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

வெள்ளி 26, மே 2023 11:20:57 AM (IST)

தி.மு.க. ஆட்சியின் குளறுபடிகளால் ஆவின் அழிவுப்பாதைக்கு செல்கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் என இருவரும் தி.மு.க. ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் குறைந்த விலையில் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதையிலிருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory