» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் ஏப்.5ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தகவல்

சனி 25, மார்ச் 2023 11:05:05 AM (IST)

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஏப்.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 22) 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. 05.04.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.

உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள்  தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேவை நாளாக அறிவிக்கப் படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவிய ருக்கு இவ்வேலைநாள் பெருந்தாது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

தமிழன்Mar 25, 2023 - 01:04:30 PM | Posted IP 162.1*****

பங்குனி உத்திர திருநாளில் எல்லா சமூகத்தினரும் குல தெய்வ கோவில்களுக்கு செல்வது மரபு .குறிப்பாக தென் மாவட்ட மக்கள் நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,தென்காசி மாவட்டங்களில் உள்ள எல்லா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளித்தால் மக்கள் பயன் அடைவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory