» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை திரும்ப வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சனி 25, மார்ச் 2023 9:47:31 AM (IST)

பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை நுகர்வோர்களுக்கு திரும்ப வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச்  சார்ந்த யுஜின் சஜித் என்பவர் நாகர்கோவில் கே.பி ரோட்டிலுள்ள  ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்திலிருந்து பெங்களுர் வழியாக புனே செல்வதற்கு பணம் செலுத்தியிருந்தார். சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பெங்களுர் சென்றடைந்த குழுவினர் நேரமின்மை காரணமாக புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயலவில்லை. 

இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம்  புனே சென்றடைந்துள்ளனர். பின்பு சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.60,000, நஷ்ட ஈடு ரூ.17,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.82,000-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory