» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
சனி 4, பிப்ரவரி 2023 3:37:18 PM (IST)
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். வேலூரில் பிறந்து, உலகம் முழுக்க பல கச்சேரிகள் செய்து புகழ் பெற்றவர். 1971ஆம் ஆண்டு 'குட்டி' ௭ன்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.
சின்ன சின்ன ஆசைகள் படத்தில் இடம்பெற்ற ''மேகமே... மேகமே...'' , வைதேகி காத்திருந்தாள் படத்தின் ''இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..'' போன்ற பாடல்கள் இன்றும் பலரின் விருப்பப் பாடல்களாக உள்ளன. 'தீர்க்க சுமங்கலி' ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுத, எம்.எஸ். விசுவநாதன் இசையில் ''மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..'' பாடலை பாடினார்.
19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய புகழுக்குச் சொந்தக்காரர் வாணி ஜெயராம். 1971ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாகவே கோலோச்சி வந்தவர்.
தமிழகம், ஆந்திரம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளை வாணி ஜெயராம் பெற்றுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். திரையிசைப் பாடல்கள் மட்டுமின்றி பல பக்திப் பாடல்களையும், ஆல்பம் எனப்படும் தனியிசைப் பாடல்களிலும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:11:51 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:04:47 PM (IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் சிக்கினார்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:02:15 PM (IST)

வேளாண்மையை ஊக்குவிக்கும் பட்ஜெட்: வைகோ வரவேற்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 4:47:45 PM (IST)

ஆஸ்கர் வென்ற இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:20:38 PM (IST)

கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து
செவ்வாய் 21, மார்ச் 2023 2:49:16 PM (IST)
