» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா நினைவு தினம்: அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:38:51 PM (IST)தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
திராவிட கழக தலைவர் வீரமணி, அமைச்சர்கள் கீதாஜீவன், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், ரகுபதி, நேரு, வேலு, செந்தில் பாலாஜி, எம்.பி.  வக்கீல் வில்சன், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், தூத்துக்குடி மாநகர திமுக துணை செயலாளரும், கவுன்சிலருமான கனகராஜ், உள்பட பலர் கலந்து அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தான் கருத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory