» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பிப்.15 வரை கால நீட்டிப்பு

செவ்வாய் 31, ஜனவரி 2023 3:30:16 PM (IST)

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 67 லட்சம் நுகர்வோர்களில் ஏறத்தாழ 90.69 விழுக்காடு பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்று காலை இணைத்திருக்கின்றனர். இன்னும் 9.31 விழுக்காடு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

குறிப்பாக, வீடுகளைப் பொறுத்தவரை 2 கோடியே 32 லட்சம் நுகர்வோர்களில் 2 கோடியே 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் ஒரு 15 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. கைத்தறியைப் பொறுத்தவரைக்கும் 74 ஆயிரம் இணைப்புகளில் 70 ஆயிரம் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 ஆயிரம் இணைப்புகள் மட்டும் பாக்கி உள்ளது. விசைத்தறியைப் பொறுத்தவரை 1 லட்சத்து 63 ஆயிரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னுமொரு, 9 ஆயிரம் பேர் பாக்கி உள்ளனர்.

மொத்தமுள்ள 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில், 5 லட்சத்து 11 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் 4 லட்சத்து 33 ஆயிரம் குடிசைகள்தான் இணைக்க வேண்டிய நிலுவை இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே இப்போது மின் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக எத்தனை நாட்கள் கூடுதலாக தேவைப்படும், இதில் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது அவற்றை களைய வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வரக்கூடிய பிப்ரவரி 15-ம் தேதி வரை, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதற்குள், அனைத்து நுகர்வோரும் நூறு சதவீதம் 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களும் இந்த இணைப்பை நிறைவு செய்துகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory