» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுங்கச்சாவடியில் இருந்து 20 கிமீ சுற்றளவில் கட்டணம் ரத்து: மத்திய அமைச்சர் தகவல்

செவ்வாய் 31, ஜனவரி 2023 3:17:16 PM (IST)

நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிமீ சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் கிடையாது என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். 

நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory