» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் உதயநிதி விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

செவ்வாய் 31, ஜனவரி 2023 11:21:01 AM (IST)

நாமக்கல்லில் தேசிய கீதத்தை அவமதித்த சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். 

விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது,  இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார்.

போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதனை வீடியோ பதிவு செய்தவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோர் வைரலானது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதைஅடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory