» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை: தமிழ்நாடு உணவுத்துறை

திங்கள் 30, ஜனவரி 2023 4:38:07 PM (IST)

தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையை  4.40 லட்சம் பேர் வாங்கவில்லை.  அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory