» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பு: பாஜக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்!

திங்கள் 30, ஜனவரி 2023 11:01:03 AM (IST)

தனது புகைப்படத்தை ஆபாசமாக  சித்தரித்து வெளியிட்டதாக பாஜக நிர்வாகி மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழியாக காயத்ரி ரகுராம் நேற்று இரவு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory