» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஞாயிறு 29, ஜனவரி 2023 9:40:16 AM (IST)

குற்றாலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வினித் (22). சாப்ட்வேர் என்ஜினீயரான இவரும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் படேல் மகள் குருத்திகாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் அவர்கள் குற்றாலம் போலீசில் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு வினித் புகார் மனு அனுப்பினார். இதன்பேரில் விசாரணை நடத்துவதற்காக இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். இதில் வினித் தரப்பினர் மட்டும் கலந்து கொண்டனர். பின்னர் வினித் தனது மனைவி குருத்திகாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். 

அப்போது, காரில் பின் தொடர்ந்து வந்த குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கினர். பின்னர் குருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவத்தில் புகார் செய்தும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காததால் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குருத்திகாவை கடத்திச் சென்ற கார் செங்கோட்டை அருகே ஒரு குடோன் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory