» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை-திருச்செந்தூர் சாலை பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சனி 28, ஜனவரி 2023 10:13:03 AM (IST)

நெல்லை-திருச்செந்தூர் சாலை திட்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் கூனியூரை சேர்ந்த சுந்தரவேல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை-திருச்செந்தூர் இடையிலான சாலை வாகன போக்குவரத்துக்கு வசதியாக இல்லாமல் இருந்தது. தற்போது சாலை சீரமைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் இந்த சாலை பணிகள் முறையாக நடக்கவில்லை. சாலை சீரமைப்பதற்காக பயன்படுத் தப்பட்ட தார் தரமற்றதாக இருந்தது. 

அந்த சாலையில் ஆங் காங்கேகுண்டும், குழியும் ஏற்பட்டு உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதேபோல் நெல்லை-அம்பாசமுத் திரம்-பாபநாசம் சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன. இங் கும்பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன. முறையான அளவீடுகளை பின்பற்றுவதில்லை. முறையற்ற சாலையால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. 

எனவே, நெல்லை-பாபநாசம், தென்காசி-நெல்லை, திருச்செந்தூர்-நெல்லை இடையிலான சாலைகளை முறையாக சீரமைக்க வேண்டும்.இதே போல நெல்லை தர்கா முதல் நெல்லை சந்திப்பு இரட் டைப்பாலம் வரையிலும், சேரன்மகாதேவி-சங்கன்திரட்டு வரை யிலும், கல்லூர் - சுத்தமல்லி வரையிலான சாலை மராமத்து பணிகளை முடிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுநீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நெல்லையில் இருந்து செல்லும் பெரும்பாலான சாலை சீரமைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. சேரன்மகாதேவி, கல்லூர் சாலைகளில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன, என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், மேற்கண்ட சாலை திட்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory