» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் குடியரசுதின விழா: தேசிய கொடியேற்றிய ஆட்சியர் ஆகாஷ்

வியாழன் 26, ஜனவரி 2023 10:03:53 AM (IST)தென்காசியில் குடியரசுதின விழாவில் ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியேற்றி நலதிட்ட உதவிகளை வழங்கினார். 

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 பேர்களுக்கு பதக்கங்களையும் 20 பேர்களுக்கு நற்சான்றிதழ்களை யும் ஆட்சியர் வழங்கினார்.

தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் 5 பேர்,  பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 7பேர், மாஙட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2பேர், கருவூலம் கணக்குத் துறையில் 5பேர், பட்டு வளர்ச்சித் துறையில்  5பேர் உள்பட அனைத்து அரசு துறைகளைச் சேர்ந்த  257 பேர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

விழாவில் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 14 ஆயிரத்து 410 மதிப்பீட்டீல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தியாகி லட்சுமி காந்தன் பாரதி, ஆய்க்குடி அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory