» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியரசுத் தலைவர் பதக்கம்: தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு

புதன் 25, ஜனவரி 2023 11:56:55 AM (IST)

குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டையில் 74-வது குடியரசு தினவிழா நாளை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் விருது வழங்கப்படும். இந்தாண்டிற்கான விருதுபெறும் காவலர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

சிறந்த சேவைக்கான குடியரசு காவல் பதக்கத்திற்கு 93 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகியோர் நாளை குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெறவுள்ளனர். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்கள் பதக்கத்திற்கு தமிழகத்திலிருந்து 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory