» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

செவ்வாய் 24, ஜனவரி 2023 8:12:16 PM (IST)

சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மணியைச் சார்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவர் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருந்தார். பாலிச் முடிவடைந்த பின்னர் அதற்கான முதிர்வுத் தொகையை கேட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்யூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனாலும் நுகர்வோருக்கு முதிர்வடைந்த தொகையில் ஒரு பகுதி பணம் கிடைக்கவில்லை. ஆகவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திர பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூபாய் 15,000, முதிர்வுத் தொகையின் பகுதி பணமான ரூபாய் 26,916 மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 46,916 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

என்னJan 24, 2023 - 08:46:53 PM | Posted IP 162.1*****

கம்பெனின்னு போடுங்க சார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory