» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ் சீருடையில் வந்து பைக் திருடிய வாலிபர் கைது

செவ்வாய் 24, ஜனவரி 2023 12:28:57 PM (IST)

நாகர்கோவில் அருகே போலீஸ் சீருடையில் வந்து பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே தெற்கு திருப்பதி சாரத்தைச் சேர்ந்தவர் பெர்னாட். இவர் திருப்பதி சாரம் 4 வழிச்சாலை பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்ல பெர்னாட் தயாரானார்.அப்போது போலீஸ் உடையில் வந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் காலியாகிவிட்டதாகவும் பெட்ரோல் வாங்கி வருவதற்கு மோட்டார் சைக்கிள் தருமாறு பெர்னாட்டிடம் கேட்டுள்ளார்.

போலீஸ் சீருடையில் இருந்ததையடுத்து பெர்னாட் மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து பெர்னாட் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பெர்னாட்டிடம் போலீஸ் சீருடையில் வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.  மேலும் அந்த வாலிபர் நிறுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. 

கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் போலீஸ் அடையாள அட்டையுடன் வாலிபர் ஒருவர் நேற்றிரவு சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர் நாகர்கோவிலிலும் மோட்டார் பைக் திருடியிருப்பது தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory