» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி வழக்கு நாளை விசாரணை

செவ்வாய் 24, ஜனவரி 2023 10:21:22 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் நாளை நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிதியின் மூலமாக கல்வி, மருத்துவம், விவசாயம், மகளிர் சுய உதவி குழு வழியாக ஏராளமானவர்கள் பலன் அடைந்து வந்தனர். தற்போது தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் ஆலை பற்றிய அறிவியல் பூர்வமான உண்மையை மக்களுக்கு எடுத்து கூறும்படியாக 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விளக்க கருத்தரங்கத்தை நடத்த அனுமதி கோரி, தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் மனு அளித்தோம். 

ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது குறித்த கருத்தரங்கிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் கோரிய தால், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (25-ந்தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

peopleJan 24, 2023 - 12:25:40 PM | Posted IP 162.1*****

holl sir, neenkal sterlite thirapenka aanal erantha oorikalukku enna pathil sollapporinkal.

GeneralJan 24, 2023 - 12:19:15 PM | Posted IP 162.1*****

Many number of people lost their life on cancer. Check on the same with health officials to speak with people the true state. Life is precious than else.

ஆம்Jan 24, 2023 - 12:10:57 PM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சிகள் இருக்கும்வரை உருப்படியாக காலிபண்ணாது எல்லாம் துட்டுக்காக மட்டும் தான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory